Super User / 2011 பெப்ரவரி 21 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
(ஒலிந்தி ஜயசுந்தர)
	
	கடந்த 15 வருடங்களாக வாக்களிக்காமலிருந்த வட மாகாண வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கற்பிக்கவுள்ளதாக நீதி, நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பவ்ரல்) தெரிவித்தது.
	
	யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா உள்ளடங்களாக  32 உள்ளூராட்சி மன்றங்களில் இந்த நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பவ்ரல் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
	
	இதற்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்ட தொழிலாளர்களுக்கும் குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
	
	இதன்போது, எவ்வாறு வாக்களிப்பது?, எவ்வாறு வேட்பாளர்களை தெரிவு செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago