2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கிறீஸில் மாயமாக மறைந்த இலங்கையர்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 01 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவிலிருந்து கிறீஸுக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இதனால் கிறீஸ் ஊடாக இலங்கையர்கள் பயணிப்பதற்கான தடை விதிப்பதற்கு கிறீஸ் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும்  வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

லிபியாவிலிருந்து கிறீஸுக்கு 'ஒலிம்பிக் சம்பியன்' என்ற கப்பலில் அழைத்து வரப்பட்ட 36 இலங்கையர்களில் 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன இந்த 15 பேரையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகம் கிறீஸிலுள்ள இலங்கைப் பிரதிநிதியுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--