Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபிலா ஹுசைன்)
தூத்துக்குடி – கொழும்பு கப்பல் சேவையின் முதலாவது கப்பல் ஜுன் 14ஆம் திகதி கொழும்பை வந்தடையுமென இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.
அடுத்த திங்கட்கிழமை தூத்துக்குடியிலிருந்து புறப்படும் இந்தியக் கப்பல் 10 - 12 மணித்தியாலய பயணத்தின் பின் கொழும்பை வந்தடையும். இதில் வி.ஐ.பி.களும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான சாதாரண பயணிகளும் பயணம் செய்வர். அதேவாரத்தில் இது திரும்பிச் செல்லவுள்ளபோதிலும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்;த சேவைக்கென இலங்கை இன்னமும் கப்பல் எதனையும் வாங்கவில்லையென இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் கூறியது.
இதில் பயணம் செய்வதற்கான கட்டணம் 60 அமெரிக்க டொலரை விட குறைவாக இருக்க வேண்டுமென்பதில் இரண்டு நாடுகளும் ஒரு கருத்தையே கொண்டுள்ளன. இது வாராந்த சேவையாக இருக்கும். இதற்கான விஸாக்களை வழமையான முறையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த சேவையின் வெற்றியைப் பொறுத்தே தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்குமிடையிலான கப்பல் சேவை பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அதிகாரிகள் கூறினர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025
mohamed mh Thursday, 09 June 2011 08:55 PM
service should be failure bcoz jet air service return ticket price economic class only 13,000 rs Chennai to Colombo...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025