Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஜூன் 09 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
இலங்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் ஆகியன இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்கிறது எனவம் இந்திய மாநிலங்கள் எவற்றினதும் நடவடிக்கை குறித்து இலங்கை கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாக ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் நாளை இலங்கைக்கு வரவுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
ajan Friday, 10 June 2011 03:06 AM
அடி பல்டி.இப்போ புரிகிறது யார் கோமாளிகள் என்று.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
38 minute ago
1 hours ago