Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 11 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மீது இந்திய மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது மக்களை தவறாக வழிநடத்துவதற்காக கையாளப்பட்ட பழைய தந்திரோபாயம் என தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி விமர்சித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தி.மு.க வின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின்போது, ஈழம் தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தி.மு.க ஆதரவு வழங்க முன்வந்தபோதிலும் தி.மு.க வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் தாக்கி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆற்றிய உரைக்கு தி.மு.க நிறைவேற்றுக்குழு கண்டனம் தெரிவித்தது.
2002 ஆம் ஆண்டு, எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியதையும் தி.மு.க. சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இராணுவம் தமிழர்களை கொல்ல முற்படவில்லை எனவும் யுத்தத்தில் அப்பாவி மக்களும் கொல்லப்படத்தான் செய்வார்கள் என முன்னர் ஜெயலலிதா கூறியமைக்கும் தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது.
கச்சதீவை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு 1974 ஆம் ஆண்டு திமுக. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தி.மு.க சுட்டிக்காட்டியுள்ளது.
2011 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கச்சதீவை மீளப்பெற மத்திய அரசை வலியுறுத்தியிருந்ததாகவும் தி.மு.க தெரிவித்துள்ளது.
27 minute ago
34 minute ago
46 minute ago
56 minute ago
IBNU ABOO Saturday, 11 June 2011 10:20 PM
அரசியலின் மறுபெயர் சந்தர்ப்பவாதம் என்பது உலகமறிந்த உண்மையாகும் .அதிலும் தமிழக அரசியல் கொள்கை குடிகாரன் பெயச்சுமாதிரி .இந்திய அரசியலின் சாபக்கேடு தமிழக அரசியலே
Reply : 0 0
xlntgson Saturday, 11 June 2011 11:35 PM
கச்சதீவு? இந்திய கூட்டாட்சியில் பிழை இல்லை;
தெரியாதது போல் மக்களை ஏமாற்றும் இரு திராவிட கட்சிகளும் செய்வது பெரும் பிழை. தமிழ் மக்கள் தேசிய கருத்துகளிலிருந்து வெகு தூரம் போய் விட்டனர். காவிரியில் நீர் வராது என்று முடிவாகி விட்டது. நீர் மின்சாரம் கைவிடப்பட்டு அனல் மின்சாரம் அமெ ஒப்பந்தத்தில் அந்தரமாகி, இப்போது சூரிய ஒளியில் மின்சாரம் என்னும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். வெற்றியாகட்டும்! தமிழ்- தமிழர் உலகத்தமிழ் எல்லாம் வாழட்டும் சக்தி இல்லையேல் ஒன்றும் இல்லையே முதலில் எரிசக்திக்கு வழி பாருங்கள்!
Reply : 0 0
thusamu Saturday, 11 June 2011 11:51 PM
நீர் உண்ணாவிரதம் இருந்து மக்களை திசை திருப்பியதை விட இது தேவலை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
46 minute ago
56 minute ago