Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 15 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுமையா ரிஸ்வி)
சவூதி அரேபியாவில் மரணமான குழந்தையின் பெற்றோர்களில் ஒருவர் இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானாவிற்கு மன்னிப்பை வழங்கியுள்ளார். ஆனாலும் அக் குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் மன்னித்தால் மட்டுமே ரிஸானாவை விடுவிக்க முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா சவூதியில் குழந்தையொன்றை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இவரது மரண தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவரது எதிர்காலமானது அக் குழந்தையின் பெற்றோர்களின் கையிலே தங்கியுள்ளது.
நாங்கள் ரிஸானாவின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். அவரது விடுதலைக்கு ஈடாக பணம் கோரப்படுமாயின் அதை கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது
நாங்கள் ரிஸானாவின் குடும்பத்துக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். இருப்பினும் அவர்கள் ரிஸானா தாயகம் திரும்பவேண்டும் என்பதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
29 minute ago
46 minute ago
3 hours ago
6 hours ago
xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 15 June 2011 09:09 PM
குழந்தையின் பெற்றோரில் ஒருவர் தாயா, தந்தையா? அமைச்சருக்கு அதை சொல்லக்கூடாது என்று பணித்தனரோ?
Reply : 0 0
Niyas Thursday, 16 June 2011 06:17 AM
பெண்களை வேலைக்கு அனுப்பி அதில் சொகுசாக வாழ நினைக்கும் நம் நாட்டு அரசாங்கம் எப்போதுதான் நிறுத்த போகிறதோ தெரியவில்லை?
Reply : 0 0
IBNU ABOO Friday, 17 June 2011 02:17 AM
மனக்காயம் ஆற ஆத்திரம் அடங்கும் அப்போது மட்டவரும் மன்னித்து விடுவார் . இப்போது மன்னித்தவர் மன்னிப்பை வாபஸ் வாங்காமலிருந்தால் அது பெரிய விஷயம் .அல்லா நாடாமல் எதுவும் நடைபெறாது. நாம் செய்யக்குடியது உயிரை காக்க பிராத்திப்பதுதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
3 hours ago
6 hours ago