Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
பஸ் கட்டணங்களுக்காக செப்டெம்பர் 24 ஆம்திகதி முதல் முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த, கெமுனு விஜேரட்ன தலைமையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு மற்றொரு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பஸ் கம்பனி சம்மேளனம் எனும் மற்றொரு பஸ் உரிமையாளர் சங்கம் முற்கொடுப்பனவு அட்டை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அனுமதி பெறாத இத்திட்டம் சட்டவிரோதமானது என இச்சங்கம் கூறியுள்ளது.
இச்சம்மேளனத்தின் செயலாளர் அஜந்த பிரியன்ஜித் கூறுகையில், முற்கொடுப்பனவு அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்த எந்தவிதத்திலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார்.
'பஸ் பயண நேர அட்டவணைக்கான அவசிய தேவை உள்ளது. நேர அட்டவணை இல்லாமல் இத்திட்டம் வெற்றியளிக்கமாட்டாது. முற்கொடுப்பனவுத் திட்டத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால், அதற்குமுன் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இத்திட்டம் பல மில்லியன் ரூபா பெறுமதியானது. எனவே இதை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ' என அவர் கூறினார்.
இச்சம்மேளனத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாண்டோ இது தொடர்பாக கூறுகையில், தற்போது பயன்படுத்தப்படும் ரிக்கெட் இயந்திரங்கள் மேலும் முன்னேற்றப்பட வேண்டும். 70 சதவீதமான ரிக்கெட் இயந்திரங்கள் முறையாக இயங்குவதில்லை. தொடர்ச்சியாக அவைசெயலிழப்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது' என்றார்.
rozan Wednesday, 14 September 2011 07:30 AM
இலங்கையை திருத்த முடியாது................
Reply : 0 0
xlntgson Wednesday, 14 September 2011 09:23 PM
முன் அட்டை தேடி தேடி திரிவதற்குள் பஸ் போய் விடும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago