Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திஹாரி, பத்தலஹேனவத்த பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த நான்கு சிறுமியர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் மேற்படி இல்லத்தின் முன்னாள் பெண் நிர்வாகியும் அவரது 15 வயதான மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு சந்தேக நபர்களையும் மினுவன்கொட, கல்கந்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் அனோமா திஸாநாயக்கா தெரிவித்தார்.
குறித்த சிறுமியர் நால்வரையும் மேற்படி 15 வயதான சந்தேக நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பதுடன், அவரது தாயாரான முன்னாள் நிர்வாகி, தனது மகனின் செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் உரிய விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சந்தேகநபரான முன்னாள் நிர்வாகி, கடந்த 3 வருடங்களாக மேற்படி சிறுவர் இல்லத்தில் சேவையாற்றிய நிலையில் இவ்வருடம் தனது பணியிலிருந்து விலகிச் சென்று, கல்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் நிர்வாகியாகச் சேவையாற்றி வந்துள்ளார்.
திஹாரியில் அமையப்பெற்றுள்ள சிறுவர் இல்லத்தில் 10 சிறுமியர் உட்பட 24 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இந்த சிறுவர் இல்லம் உரிய முறையில் பதிவு செய்யப்படாதுள்ளதால் அதிலுள்ள 24 சிறுவர்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீயினால் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய போதே குறித்த இல்லத்தைச் சேர்ந்த சிறுமியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதான தகவல் கசிந்ததாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் அனோமா திஸாநாயக்கா மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago