2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முன்னாள் இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

Super User   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

சிறைச்சாலை அதிகாரிகள் தமது கடமையை செய்வதை தடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கப்டன் ஒருவரை செப்டெம்பர் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இன்று உத்தரவிட்டார்.

ஜூலை 21 ஆம் திகதி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துச்  செல்லப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளின் கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக இச்சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அடையாள அணிவகுப்பொன்று, நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரினர். அடையாள அணிவகுப்பொன்று நடந்தால், சந்தேக நபரை அடையாளம் காட்டமுடியும் என சாட்சிகள் கூறியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .