2021 மே 10, திங்கட்கிழமை

வை.எம்.எம்.ஏ பேரவையினால் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான புலமைப் பரிசில் விண்ணப்பம் கோரல்

Super User   / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால் க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரன தர பரீட்சையில் சித்தியடைந்து 2011ஆம் ஆண்டில் க.பொ.த. உயர் தர முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இந்த புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை நடு முழுவதும் உள்ள வை.எம்.எம்.ஏ கிளைகள் அல்லது வை.எம்.எம்.ஏ பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.ymmaconference.org ஊடாக பெற முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேசிய பொது செயலாளர், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை
இல.63, தெமட்டகொட வீதி, கொழும்பு – 09 என்ற முகவரிக்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.

க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால்  வருடாந்தம் பல மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X