2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கை சிறைக்கைதிகளுக்கு இந்தியாவில் ஆன்மீக சுற்றுலா வாய்ப்பு?

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறையில் சிறந்தமுறையில் நடந்துகொள்ளும் கைதிகள் குழுவொன்றை இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு அனுப்பும் யோசனையொன்று குறித்து இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் ஆராய்கிறது.

இந்த ஆன்மிக சுற்றுலா புனர்வாழ்வு மற்றும் சீர்திருத்த செயன்முறையின் ஒரு பகுதியாக அமையும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைக்கைதிகள் நலன்புரி சங்கமொன்றினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரிய குற்றமிழைக்காத சிறையில் சிறந்த நடத்தையை வெளிப்படுத்தும் 30-40 ஆண் கைதிகளை இந்த சுற்றுலாவுக்கு அனுப்புவது குறித்து ஆராயப்படுகிறது.

எனினும் இச்சுற்றுலாவுக்கான காலஅளவு தீர்மானிக்கப்படவில்லை. இச்சுற்றுலாவில் இந்தியாவிலுள்ள பௌத்த யாத்திரைத் தளங்களுக்கு  செல்ல வசதிகள் செய்யப்படும். இந்து, முஸ்லிம், கத்தோலிக்கர்களுக்கும் இதேபோன்ற வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

எனினும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமா அதிபரின் அனுமதியை பெறவேண்டியிருக்கும் என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை சிறைக்கைதிகளுக்கு விஸா வழங்க இந்தியாவை சம்மதிக்கச் செய்வதும் மற்றொரு கடினமான காரியமாக இருக்கும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0

 • meenavan Wednesday, 28 September 2011 01:18 PM

  சாத்தியப்படாத முயற்சிகளை மேற்கொள்வதில் நமக்கு நாமே நிகர். சுற்றுலா முயற்சி நிதியை கைதிகளின் தொழில் ஊக்குவிப்புக்கு பயன்படுத்தலாமே?

  Reply : 0       0

  xlntgson Wednesday, 28 September 2011 08:27 PM

  மோட்சம் பெற சிறை செல்ல விரும்பு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .