2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பறிமுதல் சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அதன் உரிமையாளர்கள் மீளப்பெற வாய்ப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செயற்பாடு குறைந்த மற்றும் பயன்பாடு குறைவாகவுள்ள சொத்துக்களுக்கு புத்துயிரளித்தல் எனும் பறிமுதல் சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அதன் உரிமையாளர்கள் மீளப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அச்சட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், குறித்த நிறுவனங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான செயற்றிட்டத்தை மேற்படி நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்வைக்கும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு அமைய அவற்றை மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதன்போது, பறிமுதல் சட்டமூலம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 'மேற்படி பறிமுதல் சட்டத்தின் கீழ் நட்டத்தில் இயங்கும் 37 நிறுவனங்களை சுவீகரிக்க அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. இதன்படி சுவீகரிக்கப்படும் நிறுவனங்களுக்கு புத்துயிரளித்தல், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உற்பத்தியினைப் பெருக்குதல் உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்திற் கொண்டே இந்நிறுவனங்கள் சுவீகரிக்கப்படுகின்றன.  

இந்நிலையில், மேற்படி காரணங்களை கருத்திற்கொண்டு குறித்த நிறுவனங்களை இலாபத்துடன் நடத்துவதற்கான முறையான செயற்றிட்டங்களை முன்வைக்கும் நபர்களுக்கு அந்நிறுவனங்கள் கையளிக்கப்படவுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், குறித்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் மேற்கண்டவாறான முறையான செயற்றிட்டத்தை முன்வைக்க முடியும் என்பதாகும்.

இதேவேளை, அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் நிறுவனங்களை கையாள்வதற்காக தகுதிவாய்ந்த அதிகாரிகள் குழுவொன்று இன்னும் ஓரிரு வாரங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (M.M)


  Comments - 0

 • pasha Thursday, 17 November 2011 10:11 PM

  puthi saali yosithu mudiveduppan, muddal mudiveduthu yosippan.

  Reply : 0       0

  lankan Friday, 18 November 2011 05:18 PM

  என்ன பண்ண அரசாங்கத்துல உள்ள நட்டமடஞ்ச கம்பனி எல்லாம் யாருகிட்ட கொடுக்கப் போறீங்க? நாட்ட குட்டிசுவர் ஆக்க முடிவு செஞ்சிடிங்க. பண்ணுங்க பார்க்கலாம். அப்புறம் கடாபி போல...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .