2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பரிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பரிதி சுட்டுக்கொலை

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி என்பவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்களிலில் வந்த முகமூடி அணிந்த இருவர் - பரிதிமீது மூன்றுமுறை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலிருந்து வெளியே வருகையிலேயே நேற்றிரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பரிஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதிமீது இனந்தெரியாதோர் கத்திக் குத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .