2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ராஜினாமா சட்ட ரீதியற்றது: பொன்சேகா

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோரின் ராஜினாமா சட்ட ரீதியற்றது என அக்கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசியல் கட்சியாக ஜனநாயக தேசிய முன்னணி இதுவரை பதிவு செய்யப்படாமையினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் இராஜினாமா சட்ட ரீதியற்றது என அவர் குறிப்பிட்டார்.

இராஜினாமா தொடர்பில் அதிர்ச்சி அடைந்தாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் அனுப்பியுள்ள கடிதத்திலேயே பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினர் என்ற வகையிலேயே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் அடுத்த கட்ட அரசியல் தீர்மானம் குறித்த அவதானித்து கொண்டிருப்பதகவும் குறித்த கடிதத்தில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினராக செயற்படுவதா இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .