2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவின் ஆணை கோரும் மனு ஒத்திவைப்பு

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

நாடாளுமன்றத்தில் அமரவும் வாக்களிக்கவும் தன்னை அனுமதிக்க கோரி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த ஆணை கோரும் மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

இந்த வழக்கின் நீதிபதி குழாமில் சிஸர டி அபுறூ, எ.டப்ளியூ.எ.சலாம் மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் இருந்தனர்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட, தேர்தல் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உள்ளடங்களாக எண்மர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .