2021 ஜனவரி 23, சனிக்கிழமை

தெற்கு நெடுஞ்சாலையில் பொழுதுபோக்கு நிலையங்கள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியே வெலிப்பனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உணவகங்கள், மருத்துவக் குளியலகங்கள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன இன்னும் சில வாரங்களில் பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ள.

இவற்றுக்கு மேலாக எரிபொருள் நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், வாகன தரிப்பிடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவை, இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் உப நிறுவனங்களான ஸ்ரீலங்கா இன்சுவரன்ஸ் றிசோட்ஸ் மற்றும் 'ஸ்பாஸ் லிமிட்டெட்' என்பவற்றால் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளன.

இதேவிதமாக, மாக்கும்புர நகரத்தையும் அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அங்கு இன்னும் கூடுதலான வசதிகள் இருக்கும் என்றும் இந்த திட்டங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .