2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

உறவுகள் வளர்ந்தோங்கும்: ஜிங்பிங்குவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Kanagaraj   / 2012 நவம்பர் 16 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனக் கம்பியூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவாகியுள்ள ஜீ ஜிங்பிங்குவின்  தலைமைத்துவத்தின் கீழ் சீன – இலங்கை உறவுகள் மேலும் வளர்ந்தோங்கும்.

கடந்த காலங்களைப் போன்று உங்கள் பதவிக் காலத்திலும் இலங்கையின் உண்மைத் தோழனாக சீனா இருக்குமென்று தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனக் கம்பியூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவாகியுள்ள ஜீ ஜிங்பிங்குவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த வெற்றி ஒரு சிறந்த வெளிப்பாடாகும். அரசியல் மற்றும் நாட்டு விவகாரங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் ஆழமான பரவலான அனுபவம் சீனாவை முன்கொண்டு செல்ல துணை புரியும்.

உங்கள் தலைமைத்துவத்தில் சீன – இலங்கை உறவுகள் மேலும் வளர்ந்தோங்கும். கடந்த காலங்களைப் போன்று உங்கள் பதவிக் காலத்திலும் இலங்கையின் உண்மைத் தோழனாக சீனா இருக்குமென்று தாம் நம்புகின்றோம்.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் சமூக நீதிப் பெறுமானங்களின் மீது ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ;ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் உங்களுடன் நெருக்கமாகவும், ஒத்துழைப்புடனும் செயலாற்ற எதிர்பார்க்கிறேன்.உங்கள் ஆரோக்கியம் மற்றும் சகலதுறை வெற்றிக்கும் வாழ்த்துகிறேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .