2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பங்குச் சந்தையில் ஊ.சே.நி முதலீடு: அமுனுகம

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

ஊழியர் சேமலாப நிதியம் கடந்த இரண்டு வருடங்களில் கொழும்பு பங்குச் சந்தையில் 3,937 கொள்வனவுகளையும் 1,453 விற்பனைகளையும் மேற்கொண்டதாக நாடாளுமன்றத்தில் நேற்று  தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹர்ஷ டி சில்வாவின் கேள்விக்கு பதிலளிக்கபோதே பிரதியமைச்சர் டாக்டர் சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.

ஹர்ஷ எம்.பியின் இந்த கேள்வி நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் ஒரு வருடத்துக்கு மேலாக இருக்கின்ற போதிலும் அக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் 5 தடவைகள் தவணை கேட்டது.

எ.சி.ல் கேபிள்ஸ், அய்ற்கென் ஸ்பென்ஸ், ஏசியன் ஹோட்டல்ஸ், ஆசிரி மெடிக்கல் சேர்விஸ், சிலோன் கோட்ட் ஸ்டோர்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங், லங்கா வோல் டைல்ஸ், லாப் கேஸ் என்பவை உட்பட பல கம்பனிகளில் ஊழியர் சேமலாப நிதி முதலீடு செய்துள்ளது.

பிரச்சினைக்குரிய சில முதலீடுகளை சுட்டிக்காட்டவே தான் விரும்பியதாகவும் ஆனால் அமைச்சர் முழுமையான பதில் தர தவறியுள்ளார் என சுட்டிக்காட்டிய ஹர்ஷ எம்.பி ஊழியர் சேமலாப நிதியத்தின் 2011 ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .