2021 மே 06, வியாழக்கிழமை

மீரிகம பிரதேச சபைக்கான வரவு-செலவுத்திட்டம் தோல்வி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்காமையினால் மீரிகம பிரதேச சபைக்கான வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

சுதந்திர முன்னணியைச்சேர்ந்த 12 உறுப்பினர்களில் சபைத்தலைவரும் ஹெல உறுமயவின் உறுப்பினர் மட்டுமே சபைக்கு இன்று சமூகமளித்துள்ளனர்.

சுயாதீன உறுப்பினர் அடங்களாக வரவு-செலவுத்திட்டத்திற்கு இவர்கள் மூன்று பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அவையிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரும் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளர்.

இந்த பிரதேச சபைக்கான வரவு-செலவுத்திட்டம் 21 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு தோல்வியை தழுவுவது இதுவே முதல் தடவையாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .