2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மரண தண்டனையை நிறைவேற்றவும்: கைதிகள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.எம்.ரிஃபாத்
, மொஹொமட் ஆஸிக்

மரண தண்டனையை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் மூன்று கைதிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விரைவில் அமுல்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் மூவரே இவ்வாறு சிறைச்சாலையின் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பைச்சேர்ந்த கமலேந்திரன், பொத்துவிலைச்சேர்ந்த சமன் சந்திர, பிபிலையைச் ஆனந்த ஆகிய மூன்று கைதிகளே இவ்வாறு சிறைச்சாலையின் கூரையின் மீதேறி எதிர்ப்பு ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தற்போது மரண தண்டனை இல்லை என்று தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள் அந்த மூன்று கைதிகளையும் கூரையிலிருந்து கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0

  • xlntgson Thursday, 07 February 2013 04:47 AM

    Guilty. Jump without safety straps if you are so realized!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--