2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மாலைத்தீவு விவகாரம் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா

Kanagaraj   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவுகளில் நடந்து வரும் பிரச்சினைகளுக்காக அமெரிக்கா வருத்தம் அடைகிறது. வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு இருதரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் மாலைத்தீவுகளின் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மாலைத்தீவுகளின் முன்னாள் அதிபர்  மொஹமட் நஷீட் கடந்த 13 ஆம் திகதி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியாவும் மாலைத்தீவுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையிலேயே அமெரிக்காவின் வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
மாலைத்தீவுகளில்  நடந்து வரும் பிரச்சினைகளுக்காக அமெரிக்கா வருத்தம் அடைகிறது. வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். வழக்குகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் ஒத்துழைக்க வேண்டும்.

மாலைத்தீவுகளின் தேர்தல் நடைமுறைகளில் உள்ள நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டும். தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் அவரவர்  தேர்ந்தெடுத்த வேட்பாளர்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.

அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, மாலத்தீவுகளின் ஜனநாயகம் மதிக்கப்படும் வகையிலும் மனித உரிமை  மற்றும் அடிப்படை சுதந்திரம் பதிக்கப்படாத வகையிலும் ஒரு வழியை கண்டறிய வேண்டும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .