2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மலையக தேசிய முன்னணி 'மண்வெட்டியில்' போட்டி

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அழகன் கனகராஜ்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் வவுனியா, கண்டி மற்றும் நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மலையக தேசிய முன்னணி போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

 மத்திய மாகாணத்தில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் இன்று மாலைக்குள் இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் முன்னணி அறிவித்துள்ளது.

அத்துடன், இதர கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பிரஜைகள் முன்னணி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் இன்று மாலைக்குள் இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் முன்னணி அறிவித்துள்ளது.
கொழும்பு, நிப்போன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், மலையக மக்கள் முன்னணியின தலைவி சாந்தினி சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் செல்வநாயகம், தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் ஐயாத்துரை, பொதுச்செயலாளர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறடித்துவிடப்படகூடாது என்பதனை கருத்தில் கொண்டே மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் புதிய இடதுசாரி முன்னணி ஆகியன இணைந்து 'மலையக தேசிய முன்னணியில்' போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையிலான தொழிற்சங்கமும் போட்டியிடவுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளது. இந்த இரு கூட்டணிக்கும், மலையக தேசிய முன்னணி சவாலாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X