2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அமெரிக்காவின் முடிவு ஆறுதலளித்துள்ளது: அமைச்சர்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

அமெரிக்காவின் கடன் எல்லையை அதிகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியும் செனட்டும் எட்டிய உடன்பாடு அமெரிக்க திறைசேரி உண்டியலில் வெளிநாட்டு ஒதுக்குகளை முதலீடு செய்த இலங்கைக்கு பெரும் ஆறுதலளித்துள்ளது என அமைச்சர் ஒருவர் கூறினார்.

கடன் எல்லையை அதிகரிக்க முடிந்தமையால் அமெரிக்க அரசாங்கம் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாத வங்குரோத்து நிலை ஏற்படுவதை தவிர்த்துக்கொண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அமெரிக்காவில் உண்டியலில் முதலீடு செய்திருந்ததால் அமெரிக்காவில் நடைபெறுவதை கவனமாக அவதானித்து வந்தோம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்காவின் கடன் நெருக்கடி மோசமடைந்திருப்பின் இலங்கையின் முதலீட்டுக்கான கொடுப்பனவுகளை அமெரிக்காவால் செய்ய முடியாது போயிருக்குமென அமைச்சர் கூறினார்.

அமெரிக்காவின் கடன் எல்லையை அதிகரிப்பதற்கான பிரேரணையை செனட்டும், பிரதிநிதிகள் சபையும் இறுதி நேரத்திலாவது அங்கீகரித்ததன் மூலம் பெரும் உலக நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .