2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தமிழர் பிரச்சினை; இலங்கை ஆக்கபூர்வமாக செயற்படவில்லை: இரா.சம்பந்தன்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும். இந்த விவகாரத்தில் இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இரா.சம்பந்தன், சென்னையிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து அவ்வலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள சம்பந்தன், 'இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை' என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை. இதில் திருத்தத்தை மாற்றும் முயற்சி முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆலோசித்து சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்' என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். (தினமலர்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--