2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களின் பேச்சு இரத்து

Kanagaraj   / 2014 மார்ச் 24 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - இந்திய மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடத்த ஏற்பாடாகியிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவிருந்த இந்திய மீனவப் பிரதிநிதிகளின் வருகை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை இனி நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 74 இந்திய மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்த போதிலும் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் சட்டத்தின் பிரகாரமே விடுவிக்கப்படுவார்கள். தமிழகத்தின் அழுத்தங்களுக்காக விடுவிக்கப்படமாட்டார்கள் என்று மீன்பிடித்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் ராஜபக்ஷ மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .