2021 மார்ச் 06, சனிக்கிழமை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்சமயம் 608 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூலமாக வழங்கப்பட்ட வாக்குகளில் விபரங்களை இரவு 8 மணியளவிலும், முதலாவது தேர்தல் முடிவு இரவு 11 மணியளவிலும் வெளிவரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்முறைகளின்றி வாக்கெடுப்பு நிறைவடைவதற்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .