2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

புத்தரை பச்சை குத்திய பெண் வெளியேறினார்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


புத்தரின் உருவத்தை கையில் பச்சைகுத்தியவாறு இலங்கைக்கு வந்த பிரித்தானிய பெண் பிரஜை, சற்றுமுன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அவர் லண்டன் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலைய தகவல்கள் உறுதி செய்தன.

சுற்றுலாச் சபையினால் அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் தான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்பதை பிரித்தானியாவுக்குச் சென்றே தீர்மானிப்பதாகவுத் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சுற்றுலாச் சபை தலையிட்டது. என்னுடைய பிரச்சினை நீதிமன்றம் போக வேண்டிய பிரச்சினையல்ல. என்னுடைய அனுபவம் வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது' என்றும் அப்பெண் தெரிவித்தார் என ஏ.எப்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .