2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண உறுப்பினர் விவகாரத்தில் மாற்றமில்லை: மஹிந்த

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபைக்காக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களில் எவ்விதமாக மாற்றங்களும் செய்யப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபைக்காக  பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தமை தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

32 உறுப்பினர்களை கொண்ட ஊவா மாகாண சபைக்கு, பதுளை மாவட்டத்திலிருந்து இதுவரை காலமும் 21 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், பதுளை மாவட்டத்திலிருந்து இம்முறை 18 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர். பதுளை மாவட்டத்தில் குறைக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்திற்கு சேர்த்துகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .