Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kanagaraj / 2015 பெப்ரவரி 03 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 67ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை(04) கொண்டாடப்படுகின்றது. அதன் பிரதான வைபவம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும்.
'செழுமையான தாயகம்! அபிமானமான நாளை' எனும் தொனிப்பொருளிலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கின்றது.
பிரதான வைபவம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். அழைக்கப்பட்ட அதிதிகளில் முதலாவது மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க காலை 8.33க்கு வருகைதருவார்.
காலை 8.37 க்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவும் அதன்பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் காலை 8.41க்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகைதருவார்கள்.
காலை 8.45க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் குதிரைப்படை, பொலிஸ் மோட்டார்படை சகிதம் வருகைதருவர். ஜனாதிபதியின் வருகையை சங்கொலி மூலமாக இலங்கை இராணுவத்தினர் அறிவிப்பர்.
பாடசாலை மாணவர்கள் 100 பேர் தேசிய கீதமிசைக்க காலை 8.50க்கு ஜனாதிபதி, தேசிய கொடியை ஏற்றிவைப்பார். காலை 9.09க்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தப்படுவதுடன் 21 துப்பாக்கி வேட்டுகளும் தீர்க்கப்படும். அதன் பின்னர் காலை 9.15க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றுவார்.
அதன் பின்னர் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வார். இந்த பிரதான வைபவம் சைத்திய வீதியிலுள்ள கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கலங்கரைவிளக்கத்திலிருந்து 25 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதுடன் நிறைவடையும்.
67ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago