Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, ஜனாஸாவை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் நீதவானின் உத்தரவு உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
அவரது ஜனாஸா புதைக்கப்பட்டுள்ள மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாரஹேன் பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.
அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
20 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago