2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இராணுவ குண்டர்கள் கைது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைக்குண்டுகள் சில மற்றும் கத்திகள் இரண்டுடன் சப்ரகமுவ மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச்சேர்ந்த பிரபல அரசியல்வாதியொருவரின் தேர்தல் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் எட்டுபேரை கைதுசெய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை பன்னம்பிட்டியவில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்த எட்டுபேரில் இராணுவத்தைச்சேர்ந்த நபரொருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த அரசியல்வாதியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அச்சுறுத்துவதற்கும் அவருடைய வீட்டுக்கு சேதங்களை ஏற்படுத்துவதற்காகவும் இந்த குழுவினர் பயணித்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .