2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

‘நா’ தடுமாறினார் காமினி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான காமினி லொக்குகே ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பொழுது வாய் தடுமாறி ஓகஸ்ட் 17 தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்னால் அணி திரண்டுள்ளதாக கூறியுள்ளார். இவர் வாய் தடுமாறியது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கருத்து தெரிவிக்கையில், இந்தப் பேச்சு தவறியமை யார் உண்மையில் வெல்லப் போகிறார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என்றார்.

மேலும், தனது முன்னாள் தலைவரும் அவரை வளர்த்துவிட்டவருமான ரணில் தேர்தலில் வெற்றிப் பெறுவாரென காமினி லொக்குகே கூறிவிட்டார். பொய் சொல்ல சிலர் முயன்றாலும் நாக்கு பொய்க் கூறாது எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .