2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தேசியப் பட்டியல் எம்.பி.க்களுக்கு கால்கட்டு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியில் நியமனம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், அந்த கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.க்களுக்கு கால்கட்டு போடப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசியப்பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள், அமைச்சர், பிரதியமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்தாலோ அல்லது கிடைக்காவிட்டாலோ, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்பது கட்டாயமாகும்.

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களிடம் இருந்து எம்.பி பதவியை துறப்பதற்கான முன்கூட்டிய இராஜினாமா கடிதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், அத்தகவலை உறுதிப்படுத்தமுடியவில்லை.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .