2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'சிறுவர் பாதுகாப்பு, முதியோரின் நலன்னோம்பில் கவனம் செலுத்துவோம்'

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் உலகுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதும் சமுகத்தில் வயோதிபர்களின் அநாதரவான நிலைமையும் பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தைக் கொண்டாடும் நாம், பிள்ளைகளின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் வயோதிபர்களின் நலனோம்புகை நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மென்மேலும் கவனத்தைச் செலுத்துவது மிகவும் முக்கியமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர், முதியோர் தினத்தையொட்டி அவர், விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாம், சிறுவர்களின் மனதை அறிந்து அவர்களை அன்பாகக் கவனித்து சமூகம் மற்றும் குடும்பத்தினால் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பினை வழங்கி வாழ்க்கையில் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக அவர்களை பலப்படுத்தி அவர்களைப் பராமரித்துப் பாதுகாத்தல் வேண்டும். பிள்ளைகளை சகல வகையான அனர்த்தங்கள் மற்றும் துஷபிரயோகங்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்வது பெற்றோர், வளர்ந்தோர் அனைவரினதும் பாரிய பொறுப்பாக இருக்கின்றது. அரசாங்கம், வெகுசன ஊடகங்கள், மதத் தலைவர்கள் மற்றும் பிரஜைகள் போன்ற அனைத்துத் தரப்பினரும் அந்தப் பொறுப்பு மற்றும் பொறுப் புக்கூறலின் பங்குதாரர்கள் என்பதனைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளை நோக்கும்போது பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பாரிய சமூக சீரழிவாகக் காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சமூகத்தில் நிலவும் பாலியல் துஷ;பிரயோகத்தை ஒழிப்பதற்கும், பாலியல் கல்வியை விரிவுபடுத்தி பாலியல் சம்பந்தமான தெளிவினைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சமூகத்தை கலாசார மற்றும் ஆன்மீக ரீதியாக வளர்ச்சியடையச் செய்வதற்கும் விரிவான வேலைத் திட்டமொன்றை செயற்படுத்த வேண்டியுள்ளது.  

அத்துடன், வயோதிபர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான நலனோம்புகை நடவடிக்கைகளை மேம்படுத்துவதும், குடும்பத்தில் பிணைப்பைப் பலப்படுத்தும் சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கட்டியெழுப்புவதும் எம்முன்னே காணப்படும் சவால்களாகும்.    

அதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வேலைத் திட்டத்துடன் கைகோர்த்துச் செயற்பட முன்வருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X