2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

யுத்தம் முடிவுற்ற தினத்தில் 22 வருடகால சேவையை பூர்த்தி செய்த படையினருக்கு முழுமையான ஓய்வூதியம்

Super User   / 2011 ஜூன் 09 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

யுத்தம் முடிவுற்ற தினமான 19.05.2009 ஆம் திகதி 22 வருடகால சேவையை பூர்த்தி செய்திருந்த அல்லது குறைந்தபட்சம் 5 வருடகாலம் இராணுவ நடவடிக்கைப் பிரதேசங்களில் பணியாற்றியபின் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை உத்தியோகஸ்தர்களுக்கு முழுமையான ஓய்வூதிய சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிபந்தனையை பூர்த்தி செய்த படை உத்தியோகஸ்தர்களுக்கு  சம்பளத்தின் 85 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். 01.01.2010 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01.01.2010 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெறும் அனைத்து படை உத்தியோகஸ்தர்களுக்கும் இந்த ஓய்வூதிய நன்மைகளை வழங்க அரசாங்கம் 24.12.2009 ஆம் திகதி தீர்மானித்திருந்தது. எனினும்  19.05.2009 ஆம் திகதி இந்நிபந்தனையை பூர்த்தி செய்தோருக்கு மாத்திரம் இந்த இந்த நன்மைகளை வழங்குவதென ஓய்வூதிய திணைக்களம் பின்னர் தீர்மானித்தது.

ஏனைய படை உத்தியோகஸ்தர்களை இதிலிருந்து நீக்குவது அநீதியானது என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றில் இன்று  கூறினார். இராணுவத்தின் சேவையின் ஏனைய தேவைகளுக்காக சில உத்தியோகஸ்தர்கள் நடவடிக்கைப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படவில்லை என அவர் கூறினார்.

ஆனால், பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலளிக்கையில், நடவடிக்கைப் பிரதேசங்களில் நாட்டுக்காக உயிரையும் அர்ப்பணித்த இராணுவ உத்தியோகஸ்தர்களையும் கொழும்பு அல்லது பனாகொடையில் பணியாற்றிய ஏனைய உத்தியோகஸ்தர்களை ஒரே மாதிரியாக நடத்த முடியாது என்றார்;.

அதேவேளை நடவடிக்கைப் பிரதேசங்களில் பணியாற்றியோருக்கும் ஏனையோருக்கும் பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X