2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வடமேல் மாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் சிங்கப்பூர் பயணம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

வடமேல் மாகாணசபையில் அங்கம் வகிக்கும் 22 மாகாணசபை உறுப்பினர்கள் நேற்றிரவு சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளனர்.

கல்விச் சுற்றுலாவுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள இவர்கள்,  எதிர்வரும் 19ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

முதலில் சிங்கப்பூர் செல்லும் இக்குழுவினர், அங்கிருந்து இந்தோனேசியா மற்றும் பிலிப்பைனுக்குச் செல்லவுள்ளனர். இந்தக் குழுவில் வடமேல் மாகாணசபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ஏ. எஹியா மற்றும் றிஸ்வி ஜவஹர்சா, புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கிங்ஸ்லி லாலும் அடங்குகின்றனர். இச்சுற்றுலாவில் மாகாணசபை உறுப்பினர்களுடன் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களின் பிரத்தியேகச் செயலாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

ஏற்கனவே வடமேல் மாகாணசபையின் 24 உறுப்பினர்கள் கடந்த நவம்பர் மாதம் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--