2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக 22 பேர் சத்தியப்பிரமாணம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எஸ்.செல்வநாயகம்)


தமிழர் ஒருவர் உட்பட 22 வழக்குரைஞர்கள் ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல் முறையீட்டு நீதிபதிகள், மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டவுரைஞர்கள் ஒரு தடவையில்  கூடுதலாக  நியமிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என்பதனால் இது இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாக அமைகின்றது.

இந்த 22 புதிய சட்டவுரைஞர்களுக்கு மேலாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இந்த வருடம் மார்ச் மாதத்திலும் இந்திர சேனரத்ன சமரசிங்க மற்றும் சட்டக்கல்லூரி அதிபர் டபிள்யூ.டி.றொட்றிகோ ஆகியோர் செப்டெம்பரிலும் ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக பதவியேற்றுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்.

வழக்குரைஞர் முருகேசு சிற்றம்பலம் உட்பட 22 சட்டவுரைஞர்களே ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (படங்கள்:-குஷான் பத்திராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .