2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ரூ. 3 மில்லியன் பெறுமதியான உணவுகளை கொள்ளையிட்ட 4பேர் பொலிஸாரால் கைது

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து உலர் உணவு பொருட்களுடன் அக்குரஸ்ஸ நோக்கி சென்றுக்கொண்டிருந்த லொரியிலிருந்து 3 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கல்கிசை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் தயா சமரவீர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறுகையில், 'நேற்று புதன் கிழமை, உருளைக் கிழங்கு, நெல், பருப்பு, வெங்காயம் நெத்தலி ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் மலிபன் சந்தியிலிருந்து சென்ற லொறியொன்றை நிறுத்தியுள்ள நபர் ஒருவர் நிறுவகத்தை சேர்ந்த பொலிஸ் எனவும் லொரியை சோதனையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவ்விடத்துக்கு வெள்ளை வான் ஒன்றில் வந்துள்ள ஏனைய சந்தேகநபர்கள் லொறியின் சாரதியை வெள்ளை வானில் ஏற்றியுள்ளதுடன் லொறியையும் அவர்களில் ஒருவரே செலுத்தியுள்ளனர்.
 
மேற்படி லொறி, பண்டாரகமையை அடைந்தபோது வேறு ஒரு லொறியில் பொருட்களை மாற்றி ஏற்றியுள்ள சந்தேக நபர்கள், லொறி சாரதியிடம், உரிமையாளருக்கு லொறி தாமதமாகத்தான் வரும் என தொலைபேசி மூலம் கூறும்படி கட்டளையிட்டுள்ளனர். 

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பை வைத்தே சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் களுத்துறை சிறையிலிருந்து தப்பியோடிவர் என்றும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து ஏனையவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தயா சமரவீர கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--