2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஆஸியிலிருந்து மேலும் 30பேர் நாடுகடத்தல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கடலில் ஒரு புதிய படகு வந்துசேர்ந்த தருணத்தில் அந்நாட்டு அரசாங்கத்தால் மேலும் 30பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த 30பேரும் இன்று செவ்வாய்க்கிழமை, கிறிஸ்மஸ் தீவிலிருந்தே திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கைகளை, அவுஸ்திரேலியாவுக்கு வெளியே வைத்து விசாரிக்கும் கொள்கையை ஆகஸ்ட் 13இல் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த 30 பேருடன் சேர்த்து இதுவரை 200பேர் சுயவிருப்பம் இன்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து, தமது உயிரையும் பயணம்வைத்து வருவோர், தமது பணத்தை எறிந்தவர்களாகி விடுகின்றனர் என அவர் கூறினார். இதேசமயம், புகலிடம் கோரும் 6 பேருடன் வந்த ஒரு படகு மறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்புப்பட்டுள்ளனர்.

உடல்நலம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும் இவர்களை நவுறு மற்றும் பப்புவா நியூகினி ஆகிய தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .