2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

3,000 கிலோ பாவனைக்கு உதவாத தேயிலையுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவனைக்கு உதவாத மூவாயிரம் கிலோகிராம் நிறையுடைய தேயிலைத்தூளுடன் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று காலி, ஹினிதும, கொரலேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தேயிலைத் தூளை லொறியொன்றில் ஏற்றிக்கொண்டு ஹினிதும பிரதேசத்திலிருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றை சோதனையிட்ட போதே அது பாவனைக்கு உதவாதது என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வானின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .