2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சனல் - 4 வீடியோ தொடர்பான விசாரணை; நல்லிணக்க ஆணைக்குழு முஸ்தீபு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்னா பரணமன்னா)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் சனல் - 4 ஒளிபரப்பிய ஆவண வீடியோ காட்சியை ஆணைக்குழுவின் கடமைப்பொறுப்பின் ஒரு பகுதி என்ற வகையில் பார்வையிட விரும்புவதாக அறிவித்துள்ளது.

சனல் 4 முன்பு ஒளிபரப்பிய வீடியோ காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். இது தொடர்பில் நிபுணர்களின் அபிப்பிராயத்தை நாம் பெற்றிருந்தோம். இதே மாதிரி எமது கடமையின் ஒரு பகுதியாக இந்த வீடியோ காட்சிகளையும் ஆராயவுள்ளோமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மான் விக்ரமசிங்க இன்று டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சத்துர டி சில்வா, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று சனல் - 4 முன்னர் மே மாதத்தில் ஒளிபரப்பிய வீடியோ காட்சி பற்றிய நிபுணத்துவ கருத்தை கூறியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X