2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சனல் 4 ஆவணப்படத்தை நல்லிணக்க ஆணைக் குழு இன்னும் ஆராய்கிறது

Kogilavani   / 2011 ஜூலை 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை ஆராய்ந்து வருவதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை ஆணைக்குழு பார்வையிட்டுள்ள போதும் இதை நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தும் வேலை முடியவில்லை என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு  பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் எல்.எல்.ஆர்.சி. இன் இறுதி அறிக்கையில் சனல் 4 வீடியோ பற்றி கருத்துக் கூறப்படுமா என்பது பற்றி எதுவும் கூற முடியாது என அவர் கூறினார்.

இதேசமயம், ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரான நவநீதம்பிள்ளை யுத்தம் குற்றம் தொடர்பில் இலங்கையை எச்சரித்துள்ளார். யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கை நடவடிக்கை எடுக்கத்தவறினால்; சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கலாம் என அவர் கூறினார்.

சனல் 4 இன் முன்னைய வீடியோ தொடர்பில், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தகவல் தர மறுத்துள்ளதால் இந்த முறை எல்.எல்.ஆர்.சி. சனல் 4 இடமிருந்து தகவல் ஏதும் கோரவில்லை என அவர் கூறினார்.

இதேவேளை, ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களில் 80 வீதமானவை பகுப்பாய்வு செய்யபட்டுவிட்டன. நவம்பர் 15 இற்கு முன் ஆணைக்குழுவின் பணி பூரணமாகும் என எல்.எல்.ஆர்.சி. கூறியது.


  Comments - 0

  • aj Friday, 15 July 2011 11:55 PM

    போலி / புலி /இப்போது ஆராய்வு
    ஹ ஹ ஹ ஹ நாடக தொடர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--