2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

பண மோசடி; 5 ரஷ்யர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திர அட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 ரஷ்யப் பிரஜைகளை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்; உத்தரவிட்டுள்ளது. 

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திர அட்டையைப் பயன்படுத்தி பல மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த  5 ரஷ்யப் பிரஜைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் 250 போலி கடன் அட்டைகள், 6 மடிக்கணினிகள், 2 இரகசிய குறியிடும் கருவிகள், 2.5 மில்லியன் ரூபா பணம், 5000 யூரோ பணத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

கம்போடியா மற்றும் வியட்னாம் பங்காளர்களுடன் இணைந்தே இவர்கள் இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுக்கின்றது.

இலங்கையிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 25,000 அமெரிக்க டொலர்களை சந்தேக நபர்கள் தங்கள் வசம் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .