2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வெள்ளத்தினால் 5000 கோடி ரூபா சேதம்

Super User   / 2011 ஜனவரி 14 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போதைய வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களின் பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (சுமார் 5000 கோடி ரூபா) இருப்பதாக  அரசாங்கம் இன்றுதெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மாநாட்டுஅமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கும் இடையிலனா சந்திப்பின்போது இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலளார் திருமதி மரியானா மொஹமட் இச்சேதங்களின் பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாக ஆரம்ப மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலருணவுப் பொருட்களை வழங்குவதற்காக அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது எனவும் ஜனவரி 12 ஆம் திகதி வரையான 3 தினங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 1.5மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X