Editorial / 2019 நவம்பர் 09 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்து கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எட்டுத்திக்கிலும் வெற்றி அலை வீசுவதால் அதனை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதற்காகவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றோம். எனவே, ‘சஜித் ஒப்பரேஷனை’ நவம்பர் 16 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுசெய்து, 18 ஆம் திகதி அவரை ஜனாதிபதி கதிரையில் நிச்சயம் அமரவைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கண்டி திகன பகுதியில் நேற்று(08) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
“இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் வெற்றிபெற்றுவிடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் பிரசார வியூகமாக இருந்தது. இதற்காகவே விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில உட்பட மேலும் பலர் அரசியல் மேடைகளில் இனவாதத்தை கக்கினர். மதவாதத்தை தூண்டினர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் இவற்றை நிராகரித்தனர்.
"சில மாவட்டங்களில் கோட்டாவுக்கு ஆதரவு இருந்தாலும், அதற்கு சமாந்தரமாக சஜித் அலையும் வீசுகின்றது. ஆனால், சஜித்துக்கு சாதகமாக உள்ள மாவட்டங்களில், சஜித் 100 வீதம் என்றால் கோட்டா 35 வீதம் என்ற நிலையே இருக்கின்றது. அதாவது 65 சதவீத மேலதிக வாக்குகளால் சஜித் வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதே எமது இலக்காகும். அதற்காகவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றோம். சஜித்தால் மட்டுமே நாட்டில் நீடித்து நிலைக்ககூடிய நிலையான சமாதானத்தையும், நிலைபேண்தகு அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடிவும். எனவே, அன்னமே எங்கள் தெரிவாக இருக்கவேண்டும். அப்போதுதான் நல்லெண்ணங்கள் நாட்டில் நிறைவேறும்.” என்றார்
5 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago