2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து 658 மில்லியன் ரூபா வரி

Super User   / 2011 ஜனவரி 21 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

நாட்டில் செயற்படும் 10 தொலைக்காட்சி நிறுவனங்கள் கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாட்டு திரைப்படம், நாடகங்கள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக 658 மில்லியன் ரூபாவை வரியாக செலுத்தியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருநாணயக்காவின் கேள்வி பதிலளிக்கும் முகமாகவே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.

2010ஆம் ஆண்டில் மாத்திரம் குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் 126 மில்லியன் ரூபாய் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, மஹாராஜா நிறுவனம் அதி கூடிய தொகையாக 389 மில்லியன் ரூபாவையும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இரண்டாவது அதிகூடிய தொகையாக 89 மில்லியன் ரூபாவையும் குறித்த காலப்பகுதியில் செலுத்தியுள்ளன.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் 50 மில்லியன் ரூபா, ஈ.ஏ.பி. தனியார் நிறுவனம் 63 மில்லியன் ரூபா, ஈ.ஏ.ரி. நிறுவனம் 34 மில்லியன் ரூபா, குளோபல நெட்வேர்க் நிறுவனம் 500,000 ரூபாவையும், ஆர்ட் தொலைக்காட்சி நிறுவனம் 15 மில்லியன் ரூபா, வொய்ஸ் ஒப் ஏசியா 39,000 ரூபா, பவர் ஹவுஸ் 13 மில்லியன் ரூபா எம்.ஜி.எம்.ஆர். நிறுவனம் 1.2 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X