2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலங்கையில் 7.3% பொருளாதார வளர்ச்சி

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் பொருளாதாரம் 7.3 சதவீதத்தால் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி, தனது 2013ஆம் வருடத்துக்கான ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மை மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியுடன் 2013ஆம் ஆண்டில் வலுவான முறையில் மீளெழுச்சியுள்ள வேளையில் தொடர்ச்சியாக ஐந்தாண்டு காலங்களாக ஒற்றை இலக்க மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கம் மேலும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து ஆண்டின் இறுதியில் நடு ஒற்றை இலக்க மட்டத்தினை அடைந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் வளர்ச்சிக்கு சாதகமான முறையில் பங்களித்ததுடன் சாதகமான வானிலை நிலைமைகளும் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்ட படிப்படியான மீட்சியும் ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட உறுதியான உயர்விற்கு ஆதரவளித்ததாக மத்திய வங்கி, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் 64ஆவது ஆண்டறிக்கை, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கெப்ராலினால் கையளிக்கப்பட்டது. மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முழு விபரங்களை அறிய இணைப்பை அழுத்தவும்...

இணைப்பு...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .