2020 நவம்பர் 25, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த 9 படையினர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹதரெஸ்கொட்டுவைப் பகுதியில் 800 கிராம் கஞ்சாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9 படையினர் ஹபரன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் சட்டைப்பைகளிலும்  காற்சட்டைகளிலும்  கஞ்சாவை மறைத்து வைத்திருந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த தனியார் பஸ்  பொலிஸாரின் வீதித் தடையில் நிறுத்தப்பட்டபோது, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த 9 படையினரும் தமது விடுமுறையைக் கழித்துவிட்டு முகாமுக்கு திரும்புகையிலேயே இக்கைது இடம்பெற்றதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஹபரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (KKA)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--