2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படவில்லை:பியசேன எம்.பி.

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)


ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து இதுவரையில் தனக்கு உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.பியேசன தெரிவித்துள்ளார்.        

கட்சி கொள்கைகளுக்கு முரணான வகையில் அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் பியசேனவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில்  ஒழுக்காற்று நடவடிககைகள் எடுக்கப்பட வேண்டுமாயின் அது தொடர்பான உத்தியோகபூர்வமான எழுத்து மூல அறிவிப்பு விடுக்கப்பட வேண்டுமென  குறிப்பிட்டுள்ளா நாடாளுமன்ற உறுப்பினர் பீ.பியேசன இதுவரையில் தனக்கு அவ்வாறான அறிவித்தல் கிடைக்கவில்லை யென நாடாளுமன்ற உறுப்பினர் பீ.பியேசன தெரிவித்துள்ளார்.                                          


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .