Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 10 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் காலனித்துவ கால ரயில் கட்டுமானத்தின் சிறந்த உதாரணங்களில் ‘நைன் ஆர்ச் பிரிட்ஜ்’ உம் ஒன்றாகும். இது இலங்கையில் தெமோதர, எல்ல பிரதேசத்தில் இந்த ரயில் பாலம் அமைந்துள்ளது. பிரித்தானிய பொறியாளர்களுடன் இணைந்து, புகழ்பெற்ற இலங்கை பொறியாளரான, "மலையக ரயில்வே" என்ற திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரும், திட்ட மேலாளருமான பி.கே அப்புஹாமி, என்பவரே இதனை நிர்மாணித்துள்ளார். இவரின் நிர்மாணப் பணிகளின் கீழே இந்த பாலம் கட்டப்பட்டது.
இலங்கையின் பொறியியல் சங்கம் வெளியிட்ட " கான்கிரீட் ரயில்வே வையாடக்ட்" என்ற தலைப்பில், 1923ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில், இப்பாலம் குறித்த திட்டங்களும் வரைபடங்களும் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் பற்றிய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது டிமோதராவில் அமைந்துள்ளது, இப்பாலம் கட்டடக்கலையில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பதுடன், புத்திசாலித்தனத்தையும் வெளிகாட்டி நிற்கின்றது. இதன் அருகிலுள்ள மலைப்பாங்கானப் பகுதிகளிலுள்ள பசுமையான பகுதி இதன் அமைவிட அழகை மேலும் மெருகூட்டி காட்டுகின்றது.
இலங்கையில் சுற்றுலாச் சென்று கண்டுகளிக்கக்கூடிய இடங்களில் இந்த பாலமும் பிராதன இடத்தை பிடிக்கின்றது. இது ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள “ஹெரிபோர்டர்” பாலத்துக்கு ஒப்பானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
8 hours ago
17 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Oct 2025